சுடச் சுடச் செய்திகள்

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’

கொழும்பு: இலங்கையின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவின் ஆக அண்மைய அறிவிப்பு மனித உரிமை அமைப்புகளையும் ஆர்வலர்களையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கோத்தபய கத்தாரின் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரி வித்துள்ளார்.

2009ஆம் ஆண்டில் இலங் கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது கோத்தபய ராஜபக்சேவின் உத்தர வின்படி பல போர்க் குற்றங்கள் நடந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இலங்கையின் உள்நாட்டுப் போர் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க் காலில் முடிந்தது.

கடலையொட்டிய குறுகிய நிலப்பரப்பில் சிக்கிக்கொண்டு வேறு எங்கும் செல்ல வழியில்லாமல் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத் தினர் நடத்திய  தாக்குதலில் மாண்டதாக ஐநா தெரிவித்தது.

ஆனால் இதுவரை கோத்த பயவுக்கு எதிராக எவ்வித நடவ டிக்கையும் எடுக்காத நிலையில், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டி யிட அவர் முடிவெடுத்திருப்பது மனித உரிமை அமைப்புகளுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

“நிச்சயமாகப் போட்டியிடு கிறேன். இதுகுறித்து நான் முன்பே முடிவு செய்துவிட்டேன். அதற் காகவே எனது அமெரிக்க குடி யுரிமையை ரத்து செய்து விட்டேன்,” என்றார் கோத்தபய.

கடந்த மாதம் 21ஆம் தேதி அன்று இலங்கையில் பயங்கர வாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன.

தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித் ததில் பலர் மாண்டனர்.

தாக்குதல்களுக்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப் பட்டது.

அமெரிக்கா விலிருந்து திரும்பிய கோத்தபய ராஜபக்சேவை வரவேற்கும் இலங்கை மக்கள்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon