சீனாவின் தொலைத்தொடர்பு நிறு வனமான ஹுவாவெய்க்கு இனி மென்பொருள், வன்பொருள் சேவைகள் வழங்குவதை அமெரிக்க அரசின் உத்தரவுப்படி கூகல் நிறுவனம் ரத்து செய்து உள்ளது. அண்டிராய்ட் அமைப்பில் இயங்கி வரும் ஹுவாவெய் திறன் பேசிகளில் புதிய வடிவங்களுக்கு இனி 'ஜிமெயில்', 'யூடியூப்' போன்ற பிரபல சேவைகளைப் பயன்படுத்தும் அனுமதி இருக் காது.
இதற்கிடையே தற்போதுள்ள ஹுவாவெய் திறன்பேசிகளுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு மேம்பாடு களையும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளையும் நிறுவனம் அளிக் கும் என்று இத்தடை குறித்து நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித் தார். தற்போது ஹுவாவெய் திறன் பேசிகள் வைத்திருக்கும் பயனாளர் கள் இத்தடையால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
அமெரிக்கா சரமாரியாகத் தடை விதித்து வரும் வரிசையில் கூகல் நிறுவனம் தன் சேவைகளை மீட்டுக்கொண்டது ஹுவாவெய் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அடி யாக அமையும் என்று கருதப் படுகிறது.
அனுமதியின்றி அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவெயின் பெயரை அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து கூகல் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
இதன் தொடர்பில் அரசு ஆணைப்படி தான் செயல்படுவதாக வும் விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் நேற்று கூகல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

