15 பேர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு; ஆள்கடத்தல் என சந்தேகம்

15 பேர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு; ஆள்கடத்தல் என சந்தேகம்

2 mins read
5fbbc398-41f7-4651-a828-5be7851e40a4
விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களில் மூவர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்டு உயிரிழந்தனர். படம்: பெர்னாமா  -

பயணிகளாக 15 பேர் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன் தொடர்பில் ஐவர் மட்டுமே பயணிக்கக்கூடிய வாகனத்தில் மும்மடங்கு பயணிகள் இருந் தது ஆள்கடத்தல் கும்பல் ஒன் றின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மலேசியாவின் வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் 'புக்கிட் மேரா டோல் பிளாசா' அருகே நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த கார், விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த மூவர் வாகனத் திலிருந்து வெளியில் தூக்கி எறியப்பட்டனர்.

அருகிலிருந்த நீர்பாசன வாய்க்காலில் விழுந்து மாண்ட மூவரும் மியன்மார் நாட்டவர்.

விபத்தில் சிக்கியவர்களில் ஏழு பேருக்குப் படுகாயங்களும் மற்ற நால்வருக்குச் சிறு காயங் களும் ஏற்பட்டன.

விபத்தில் காயமடைந்த பயணிகள் தங்கள் இருக்கை களில் சிக்கிக்கொண்டதாகவும் தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், பயணிகளை மீட்டதாக வும் கூறப்படுகிறது.

மியன்மார் நாட்டவர் என்று நம்பப்படும் வாகனமோட்டுநர், சம் பவ இடத்திலிருந்து ஓடிவிட்டார்.

ஓட்டுநரைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக பேராக் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறை 'த ஸ்டார் ஒன்லைன்' நாளிதழிடம் தெரி வித்தது.

ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதால் கட்டுப் பாட்டை இழந்து சாலையின் இடது பக்கமுள்ள தடுப்புகளில் மோதி விபத்து ஏற்பட்டதாக நம்பப்படு கிறது.

அத்துடன் வாகன உரிமை யாளரை 'கம்பார்' பகுதியில் உள்ள ஒரு முகவரியுடன் அடையாளம் கண்டிருப்பதாகவும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி கூறினார்.

வாகனத்தில் இருந்தவர்கள் ஒருவருக்குக்கூட முறையான அடையாள ஆவணங்கள் இல்லை என்பதை ஆரம்பக்கட்ட விசாரணைவழி போலிசார் கண் டறிந்துள்ளனர்.

இதற்கிடையே விபத்தில் சிக் கிய 14 பயணிகளும் ஆள்கடத் தல் தொடர்பில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காரில் ஒரு பெண்ணும் 13 ஆண்களும் நெரிசலாகப் பயணம் செய்த சூழ்நிலை சந்தேகத்தை உருவாக்கி உள்ளதாக கூறப்படு கிறது.

நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத் திற்கு இந்த 14 பயணிகளையும் போய்ச் சேர்ப்பதற்காக ஓட்டுநர் அதிவிரைவாகவும் கவனக்குறை வாகவும் வாகனத்தைச் செலுத்தி இருக்கலாம் என்றும் நம்பப்படு கிறது.

இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன.