எகிப்தில் சுற்றுப்பயணப் பேருந்து மீது வெடிகுண்டுத் தாக்குதல்: 17 பேர் காயம்

கீஸா: எகிப்தின் கீஸா நகரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் சென்ற பேருந்தைக் குறிவைத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் படுகாயமடைந் தனர். பேருந்தில் சென்றவர்களில் பெரும்பாலானோர் தென்னாப்பிரிக் காவைச் சேர்ந்தவர்கள் என அதி காரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இடம், எகிப்தின் உலகப் புகழ்பெற்ற பிரமிடுகளுக்கு அருகில் உள்ளது.

எகிப்தில் கடந்த ஆறு மாதங் களில் சுற்றுப்பயணிகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவம் அது.

கடந்த டிசம்பரில் சாலை யோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் வியட் நாமிய சுற்றுப்பயணிகள் மூவரும் அவர்களின் பயண வழிகாட்டியும் உயிரிழந்தனர். அதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சந்தேகத்துக்குரிய 12 தீவிரவாதிகள் கொல்லபட்டனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon