பிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

பிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

1 mins read
3670ba41-6b40-44b7-8068-e8d4e9894b62
மதுபான விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தில் கதறி அழும் அப்பகுதி மக்கள். படம்: ஏஎஃப்பி -

பெலம்: பிரேசிலின் வட மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

விடுமுறை தினம் என்பதால் பிரேசில் வடமாநிலமான பாராவின் பெலம் நகரில் உள்ள மதுபான விடுதியில் மாலை வேளையில் அதிகமானோர் மது குடித்துக் கொண்டிருந்தபோது ஒரு மோட்டார்சைக்கிள் மற்றும் மூன்று வாகனங்களில் வந்த சந்தேக நபர்கள் எழுவர், விடுதிக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதில், மதுபான விடுதியில் இருந்த ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள் என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் தலையில் குண்டு பாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.