பாத்தாம் தீவில் கொட்டிக் கிடக்கும் நச்சுக்கழிவு

பாத்தாம் தீவில் கொட்டிக் கிடக்கும் நச்சுக்கழிவு

1 mins read

பாத்தாம்: இந்தோனீசியாவின் பாத்தாம் தீவிலுள்ள பத்து அம்பார் துறைமுகத்தில் நச்சுக் கழிவைக் கொண்டிருக்கும் குறைந்தது 60 கப்பல் கொள்கலன்கள் குவிக்கப்பட்டு உள்ளன. பாத்தாம் தீவில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நச்சுக்கழிவு, அப்பகுதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு முறையாக அனுப்பப்பட வேண்டும்.

ஆனால், அதிகளவில் குவியும் நச்சுக்கழிவு வெளிநாடுகளில் இருந்து வருவதுபோல தெரிவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தோனீசியாவிற்கு இறக்குமதியாகும் கழிவு 2017ஆம் ஆண்டு மாதம் ஒன்றுக்கு 10,000 டன்னாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மாதம் ஒன்றுக்கு அது 35,000 டன்னாக அதிகரித்தது.