400 மாணவர்களின் கல்விக் கடனை ஏற்ற தொழிலதிபர்

400 மாணவர்களின் கல்விக் கடனை ஏற்ற தொழிலதிபர்

1 mins read
0978d356-349f-4a19-913f-e762b9181250
அமெரிக்கத் தொழிலதிபர் ராபர்ட் எஃப். ஸ்மித் -

நியூயார்க்: அமெரிக்கத் தொழிலதிபர் ராபர்ட் எஃப். ஸ்மித், 400 பல்கலைக்கழக மாணவர் களின் கல்விக்கடனைத் தானே முன் வந்து செலுத்தவிருப்பதாக தெரி வித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவில் அமைந்திருக்கும் 'மோர்ஹவுஸ்' கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் திரு ஸ்மித்துக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங் கப்பட்டது. அப்போது பேசிய அவர், அந்த விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் கல்விக் கடனைத் தானே முழுமை யாக செலுத்த இருப்பதாக அறி வித்தார்.

இதையடுத்து, அங்கிருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தொழிலதிபரின் அறிவிப்பைக் கேட்டு உற்சாகம் அடைந்தனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்தையும் இன்ப அதிர்ச் சியில் ஆழ்த்தியுள்ளது.

"இந்த 400 மாணவர்களும் கறுப்பின மக்களின் முன்னேற் றத்திற்கு உதவுவார்கள்," என்று தாம் எதிர்பார்ப்பதாக திரு ஸ்மித் கூறினார்.

எனினும், இந்த 400 மாணவர்களின் மொத்த கல்விக் கடன் அளவு தெரியவில்லை.