ஹுவாவெய் மீதான தடையைத் தாமதப்படுத்தும் அமெரிக்கா

ஹுவாவெய் நிறுவனத்திற்கு எதிராக விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசாங்கம் சற்று தளர்த்தியுள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஹுவாவெய் கைப்பேசிகளுக்கான மென்பொருள் புதுப்பிப்புக்காகவும் இணையக் கட்டமைப்புகளின் பாதுகாப்புக்காகவும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஹுவாவெய் நிறுவனம் வாங்கிக்கொள்ள அமெரிக்காவின் வர்த்தக அமைச்சு அனுமதித்துள்ளது.

அமெரிக்கா தயாரிக்கும் இயந்திர பாகங்களை வாங்குவதற்கு ஹுவாவெய் மீதான தடை தொடர்கிறது. ஆயினும் அந்தத் மீதான தடை 90 நாட்களுக்குத் தாமதப்படுத்தபடும் என்றது அமெரிக்கா

ஹுவாவெய் நிறுவனத்துடனான அனைத்து வர்த்தக இணைப்புகளையும் துண்டிப்பதாக கூகல் அறிவித்ததை அடுத்து கூகலின் உரிமையாளரான ஆல்பபெட்டின் பங்கு விலை 2.3 விழுக்காடு சரிந்தது. உலகளவில் அதிகமாக வளர்ந்துவரும் ஹுவாவெய்யின் இலக்குக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜிமெய்ல், யூடியூப், குரோம் ஆகிய சேவைகளை இனி ஹுவாவெய்யின் புதிய கைப்பேசிகளில் பயன்படுத்த முடியாது.

ஹுவாவெய் நிறுவனத்தின் கருவிகளைப் பயன்படுத்த அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து 'வால் ஸ்ட்ரீட்' பங்குச்சந்தைகளில் விலைகள் சரியத் தொடங்கியுள்ளன. 'டவ் ஜோன்ஸ்' சந்தை 0.4 விழுக்காடு குறைந்ததாகவும் 'எஸ்என்பி 500' 0.6 விழுக்காடு குறைந்ததாகவும் நேற்று பதிவாகியுள்ளது.

அமெரிக்க வாடிக்கையாளர்கள் இனி ஆப்பிள் நிறுவனத்தையும் சாம்சுங் நிறுவனத்தையும் அதிகம் நம்பியிருக்கவேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் கைப்பேசிகளை அமெரிக்காவின் 80 விழுக்காட்டு வாடிக்கையாளர்கள் வாங்குவதாக 'குளோப்ஸ்டெட்ஸ்' தரவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கைப்பேசி வாடிக்கையாளர்களில் ஒரு விழுக்காட்டுக்குக் குறைவானோர் மட்டுமே ஹுவாவெய் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!