எவரெஸ்ட் சிகரத்தை 24 முறை ஏறியவர்

நேப்பாள மலையேறி ஒருவர் 24ஆவது முறையாக எவரெஸ்ட் மலையை ஏறியுள்ளார். 8,850 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் மலைச் சிகரத்தை 49 வயது காமி ரிட்டா ஷெர்பா ஏறியதாக நேப்பாள சுற்றுலாத்துறை அதிகாரி மீரா ஆச்சார்யா இன்று தெரிவித்தார்.

எவரெஸ்டை மீண்டும் ஒரு முறை ஏற விரும்புவதாக காமி கூறினார். “நான் இன்னமும் வலிமையானவன். சாகர்மாதாவை 25 முறை ஏறி முடிப்பது எனது விருப்பம்,” என்று காமி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சாகர்மாதா எவரெஸ்ட் மலையின் நேப்பாளப் பெயராகும்.