விடோடோவுக்கு வெற்றி; முடிவை எதிர்க்கும் பிரபோவோ

இந்தோனீசிய அதிபர் தேர்தலில் ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றுள்ளார் என்று நேற்று தேர் தல் ஆணையம் அதிகாரபூர் வமாக அறிவித்ததைத் தொடர்ந்து அம்முடிவை எதிர்த்து அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக விடோடோவுக்கு எதிராகப் போட் டியிட்ட பிரபோவோ சுபியாண்டோ கூறியுள்ளார்.

அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17ஆம் தேதியன்று நடைபெற்றது. 

பல வாரங்களாக நீடித்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந் ததையடுத்து, 57 வயது ஜோக்கோ விடோடா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர் தல் ஆணையம் அறிவித்தது. 

விடோடோவுக்கு 55.5 விழுக் காடு வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரபோவோ சுபியாண்டோவுக்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது.

இதற்கிடையே, பிரபோவோ வுடனும் அவருடைய ஆதரவாளர்களுடனும் தொடர்ந்து நட்பு பாராட்டுவதுடன் சகோதரத்துவ உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ளத் தாம் விரும்புவதாக இந்தோனீசிய அதிபர் விடோடோ கூறியுள்ளார். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon