நோன்புப் பெருநாளுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் கொண்டாட்டக் குதூகலத்தில் திளைத்திருந்த கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நேற்று காலை ஏற்பட்ட தீச்சம்பவத் தில் 30 கடைகள் நாசமடைந்தன.
அதிகாலை 1.35 மணியளவில் தீச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததாகவும் பத்தே நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் படை கூறியது.
துணிமணிகள், பைகள், காலணிகள் போன்ற பொருட்களை விற்கும் கடைகள் நெருப்பில் முற் றிலும் நாசமாகின.
நெருப்பை அதிகாலை 2.04 மணியளவில் அணைத்துவிட்ட தாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள விஸ்மா யாக்கின் பகுதிக்கு முன் மொத்தம் 143 கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் தீக்கு இரையான 30 கடைகளும் பொது மக்களிடையே மிகவும் பிரபலம்.
குறிப்பாக, நோன்புப் பெரு நாளுக்காக அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அதிகம் நாடும் கடைகள் இவை.
தீ ஏற்பட்டதற்கான காரணத் தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கோலாலம்பூரின் மேயர் நூர் ஹிஷாம், தீச்சம்பவத் தால் பாதிக்கப்பட்ட கடைக்காரர் களின் எண்ணிக்கை குறித்தும் ஏற்பட்ட இழப்பீடுகள் குறித்தும் மூன்று நாட்களுக்குள் கணக்கிட்டு கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட 30 கடை வியாபாரிகளுக்கும் கடை வைக்கத் தற்காலிக இடங் கள் தரும் திட்டம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. கடை வைத்திருந்தோர் மலேசியர் கள் என்றால் மட்டுமே இச்சலுகை.

