இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் அதிகம் நாடப்படும் ஒருவகை அதிநவீன வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக புலன்விசாரணை அதி காரிகள் நேற்று 'ஏஎஃப்பி' நிறு வனத்திடம் கூறினர்.
இதன்வழி, தாக்குதல் சம்பவத் தில் வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கும் அறிகுறி தெரிவதாக கூறப்பட்டது.
கடந்த மாதம் 21ஆம் தேதி அன்று மூன்று தேவாலயங்கள், மூன்று ஹோட்டல்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதல்களில் வெடி குண்டுகள் தோள்பைகளில் பதுக்கி வைக்கப்பட்டுப் பயன்படுத் தப்பட்டன.
இவ்வகை வெடிகுண்டுகள் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி பெற்ற உள் ளூர் தீவிரவாதிகளால் தயாரிக்கப் பட்டவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட உயிர்களை மாய்த்த இலங்கைத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இவ்வெடிகுண்டை, 'மதர் ஆஃப் சேட்டன்' என்று தீவிரவாதிகள் அழைப்பர்.
இலங்கைத் தாக்குதல் நடத் தியவர்கள், தங்களின் கட்டளை யில் இயங்கியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறியிருந்தது. ஆனால் தாக்குதல் நடத்துவதற்கு எந்த அளவு உதவி கிடைத்தது என் பதைக் கண்டறியும் பணியில் அதி காரிகள் தீவிரமாக இறங்கியுள் ளனர்.
வெடிபொருளைத் தயாரிக்க ரசாயனங்கள், உரங்கள் ஆகியவை எளிதில் கிடைக்கக்கூடிய அள வில் இருந்திருக்கின்றன என்றும் ஓர் அதிகாரி தெரிவித்தார்.
"வெறும் 'யூடியூப்' காணொளி யைப் பார்த்துக் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல இது. நேரடி யாகச் சந்தித்து இந்தத் தொழில் நுட்ப அறிவைப் பரிமாறிக்கொண் டிருக்கவேண்டும்," என்றார் அவர்.
இதன் தொடர்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களின் பயண விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். வெடி பொருள் தயாரிக்கும் பயிற்சிகள் எங்கு, எப்போது நடந்திருக்கும் என்பதை இதன்வழி கண் டறியலாம். இதற்கிடையே ஈஸ்டர் தாக் குதல்கள் நடந்து ஒரு மாதம் ஆகியுள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பத் தினர் நேற்று தேவாலயத்தில் கூடித் தங்கள் கண்ணீர் அஞ் சலியைச் செலுத்தினர்.
நூற்றுக்கணக்கான கத் தோலிக்கர்கள் கொழும்பில் தாக் குதல் நடத்தப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்தில் மெழுகு வத்திகள் ஏற்றிப் பிரார்த்தனை செய்தனர்.
முதன்முதலில் 1740ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இத்தேவா லயம் தாக்குதலில் பெரும் சேதம் அடைந்தது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நடந்த வண்ணம் உள் ளன.
அத்துடன் ஒரு மாத நிறைவை முன்னிட்டு போலிசும் ராணுவப் படைகளும் நாடு முழுவதும் பாது காப்பு நடவடிக்கைகளைக் கடுமை ஆக்கியுள்ளன.

