மூடப்பட்டது விலங்கியல் தோட்டம்; உரிமையாளர் கைது

கனடாவின் மோன்ட்ரியல் நகருக்கு அருகிலுள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து அங்கிருந்து 100 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விலங்கியல் தோட்டத்தில் இரண்டு புலிகள் மாண்டு கிடந்ததாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதனை அடுத்து, விலங்கு வதை செய்ததன் பேரில் விலங்கியல் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில் சிங்கங்கள், வரிக்குதிரைகள், கங்காருகள், கரடிகள் உள்ளிட்டவை அடங்கும். அந்த விலங்குகளின் உடல்நிலையை விலங்கு மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

கனடாவில் விலங்கியல் தோட்ட உரிமையாளர் ஒருவர்மீது விலங்கு வதை குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதன்முறை. இந்தக் குற்றத்திற்காக அவருக்கு ஐந்து ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

94 வயதிலும் சாவகாசமாக குதிரை சவாரி செய்த டாக்டர் மகாதீர். படம்: இணையம்

16 Sep 2019

புகைமூட்டம் சூழ குதிரை சவாரி செய்த மலேசிய பிரதமர்

சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்து ‘லைக்’களைப் பெற வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இந்தத் தம்பதி. படம்: இன்ஸ்டகிராம்

16 Sep 2019

மரணத்தின் விளிம்பில் செல்ஃபி எடுத்த தம்பதியர்