‘அமெரிக்கா அடிக்கடி மனம் மாறுகிறது’

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயார் என்றாலும் அந்நாடு தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக சீனா குறை கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை நிறுத்துவதற்கான வர்த்தக ஒப்பந்தங்களைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுய் டியேன்காய் தெரிவித்திருக்கிறார்.

“இது குறித்த முடிவை எட்ட எங்கள் அமெரிக்க சகாக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா இன்னமும் தயாராக உள்ளது. எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன,” என்று திரு சுய் அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மே மாதம் 10ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கையில் சீனா மீதான வர்த்தக வரியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உயர்த்தியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நிலுவையில் நின்றது.

“இரு தரப்பினரும் முன்பு ஏற்றுக்கொண்ட வரைவு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒரு முறைக்குப் பலமுறை திடீரென மனம் மாறி பின்வாங்கியது. ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவது அமெரிக்காதான் என்பது  இதன்மூலம்  தெளிவாகத் தெரிகிறது,” என்றார் திரு சுய்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

94 வயதிலும் சாவகாசமாக குதிரை சவாரி செய்த டாக்டர் மகாதீர். படம்: இணையம்

16 Sep 2019

புகைமூட்டம் சூழ குதிரை சவாரி செய்த மலேசிய பிரதமர்

சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்து ‘லைக்’களைப் பெற வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இந்தத் தம்பதி. படம்: இன்ஸ்டகிராம்

16 Sep 2019

மரணத்தின் விளிம்பில் செல்ஃபி எடுத்த தம்பதியர்