தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகழ்பெற்ற 'புக்கர்' விருது பெற்ற முதல் அரபு மொழி எழுத்தாளர்

1 mins read

லண்டன்: ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜோகா அல்ஹார்தி, பிரசித்திபெற்ற 'புக்கர்' விருதை வென்று, அந்த விருதைப் பெற்ற முதல் அரபு மொழி எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்று உள்ளார்.

இவரது 'செலஸ்டியல் பாடீஸ்' என்ற நூலுக்காக புகழ்பெற்ற 'மேன் புக்கர்' விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் நேற்று முன்தினம் நடந்த இந்த விருது நிகழ்ச்சியில் ஜோகாவுக்கு 50,000 பவுண்ட் பரிசும் அளிக்கப்பட்டது. பரிசு தொகையில் பாதியை அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருக்கு வழங்க உள்ளதாக ஜோகா தெரிவித்தார்.