பயனாளர்களிடம் மன்னிப்புக் கோரிய கூகல்

நியூயார்க்: கூகல் நிறுவனத்தின் ‘ஜி ஸ்பாட்’ மென்பொருளில் எளிதில் கண்டறியக்கூடிய வகையில் மறைச்சொற்களைச் சேமித்து வைத்திருந்ததற்காக அந்நிறுவனம் பயனீட்டாளர் களிடம் மன்னிப்புக் கோரி உள்ளது. கூகலின் ‘ஜி ஸ்பாட்’டில் பல ஆண்டுகளாக வெறும் எழுத்து வடிவிலாகவே பல பயனாளர்களின் மறைச்சொற்கள் சேமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பயன்படுத்தப்படு வதால் பயனீட்டாளர்களின் கணக்குகள் எளிதில் ஊடுருவப்பட வாய்ப்புள்ளது. எனினும் அபாயம் தற்போது உணரப்பட்டுள்ள நிலையில், கூகல் தனது அந்த செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் அத்தகைய மறைச்சொற்கள் ஊடுருவப் படாமல் இருக்க அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon