மகளைக் காப்பாற்றியவருக்கு நன்றிக்கடனாக சிறுநீரகத்தைத் தானம் வழங்கிய மாது

மகளைக் காப்பாற்றியவருக்கு நன்றிக்கடனாக சிறுநீரகத்தைத் தானம் வழங்கிய மாது

1 mins read

மினிசோட்டா: அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தமது மகளின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பாளருக்கு நன்றிக்கட னாக மாது ஒருவர் சிறுநீரகத்தைத் தானம் வழங்கியுள்ளார்.

பெக்கா புண்டி என்பவரின் ஒரு வயது மகள் 2017ல் வலிப்பு நோயால் தவித்தபோது 66 வயது தீயணைப்பாளர் பில் கோக்ஸ் உடனே உதவிக்கு வந்தார். இப்போது ஓய்வுபெற்ற அவர், தமக்கு சிறுநீரகம் தேவைப்படுவ தாக உதவி கோரியிருந்தார்.

அது பெக்காவின் கவனத்திற்கு வந்தது. மருத்துவச் சோத னையில் பெக்காவின் சிறுநீரகம் பில்லுக்கு ஒத்துப்போனதால், பிப்ர வரியில் பில்லுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தேறியது.