ஜகார்த்தா கலவரம்: பொய்ச் செய்திகளை தடுக்க சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டுத் தலைநகர் ஜகார்த்தாவின் மத்திய, மேற்குப் பகுதிகளில் நேற்று கலவரம் மூண்டது. 

அதைத் தொடர்ந்து வதந்திகள் பரவுவதைத் தடுக்க இந்தோனீசிய அரசாங்கம் நேற்று சமூக ஊட கங்களுக்குப் பகுதி அளவாக தற்காலிகத் தடை விதித்தது.

“சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க, சமூக ஊட கங்களின் குறிப்பிட்ட அம்சங் களுக்கு நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்,” என்று தலைமை பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ கூறினார்.

குறிப்பாக, புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங் களில் பதிவேற்றம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொய்யான காணொளிகளும் படங்களும் மக்களின் உணர்வு களுக்கு பங்கம் விளைவிக்கக்கூடி யவை என்பதாலேயே இந்த நட வடிக்கை அவசியமாகிறது என்று திரு விரான்டோ விளக்கமளித்தார்.

சமூக ஊடகங்களுக்கு கட்டுப் பாடு விதிப்பதற்குப் பதிலாக அவற்றைத் தடை செய்யாமல் அவற்றில் வலம்வரும் பொய்ச் செய்திகளை மட்டும் அகற்றுவது அவ்வளவாக பயன் தராது என்ற அவர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை நாட்டில் மில்லியன் கணக்கானோர் பயன் படுத்தும் வேளையில் பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவி கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி விடும் என்றார்.

சமூக ஊடகங்கள் மீதான இந்தக் கட்டுப்பாடு தற்காலிகமா னது என்றாலும் அது எப்போது தளர்த் தப்படும் என்பது பற்றி திரு விரான்டோ தெரிவிக்க வில்லை.

இதற்கிடையே, மத்திய ஜகார்த் தாவில் அமைதியின்மை நிலவும் வேளையில், அதிக எண்ணிக் கையில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களைத் தவிர்த்துக்கொள்ளு மாறு சுற்றுப்பயணிகளுக்கு அதி காரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கலவரத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக தனியார் வங்கியான ‘பேங் சென்ட்ரல் ஏ‌ஷியா’ (பிசிஏ), மத்திய ஜகார்த்தாவில் அதன் சில கிளை களை மூடியது.

“தற்போது இயங்குவதற்கு முற்றிலும் சாத்தியம் இல்லாத இடங்களில் உள்ள சிறிய எண்ணிக்கையிலான கிளைகள் மட்டும் மூடப்பட்டு உள்ளன,” என்று பிசிஏ வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், வங்கியின் அனைத்து மின்னிலக்கச் சேவைகளும் நாடு முழுவதும் உள்ள 99 விழுக்காடு கிளைகளும் வழக்கம்போல இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon