சுடச் சுடச் செய்திகள்

ஸி ஜின்பிங்: அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் நீடிக்கலாம்

பெய்ஜிங்: சீனாவுக்கும் அமெரிக் காவும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், நீண்ட பயணத்திற்குத் தயார்ப் படுத்திக்கொள்ளுமாறு சீன மக்களை அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்.

“இப்போது புதிய, நீண்ட போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு நாம் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,” என்று கடந்த திங்கட்கிழமை ஜியாங்ஸி மாகாணத்தில் நடந்த பேரணி ஒன்றில் அவர் கூறியபோது மக்க ளிடையே உற்சாகம் கரைபுரண்டது.

சீனாவின் அரசியல் வரலாற்றை மாற்றியமைத்தவரும் சீனக் குடியரசின் முதல் அதிபருமான மா சே துங் 1934ல் மேற்கொண்ட 6,000 கிலோ மீட்டர் நீண்ட நடைப்பயணத்தைக் குறிப்பிட்ட அதிபர் ஸி, அதற்கு அடுத்த இரண்டாம் பயணமாக இது அமையும் என்றார். அந்த நடைப் பயணத்திற்குப் பிறகு சீன பொது வுடமைக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

திரு ஸியின் உரையில் வர்த் தகப் போர் பற்றி குறிப்பிடாவிடிலும் குறுகிய காலத்தில் அமெரிக்கா வுடன் உடன்பாட்டை எட்டுவதில் சீனா நம்பிக்கையை இழந்து விட்டதை அவரது கருத்துகள் வெளிப்படுத்துவதாக சீன ஊட கங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதத் தொடக்கத்தில் இரு தரப்புக்கும் இடையே வர்த்தக உடன்பாட்டை எட்டுவதில் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஏற்கெனவே சமரசம் செய்யப்பட்ட அம்சங்களை சீனா பின்பற்றாதது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்த நாட்டை சாடினார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன் வரை சீன ஊடகங்கள் அமைதி காத்து வந்தன. வர்த்தக பதற்றநிலை மோசமடையக்கூடும் என்பதைக் குறிப்பிடும் செய்தி களைக்கூட அவை தாமதமாகத் தான் வெளியிட்டன.

அமெரிக்காவிற்கு இறக்குமதி யாகும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் (S$276 பி.) மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது வரி விதிக்கப் போவதாக திரு டிரம்ப் முதன்முறையாக அறிவித்தபோது பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந் தாலும் சீனாவிற்கு ஏற்படும் மிரட்டல் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை.

ஆனால் இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை முடங்கிய பிறகு, சீன அரசாங்க ஊடகங்கள் அவற்றின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. பேச்சுவார்த்தைகள் மூலம் கருத்து வேறுபாடுகளைக் களைய சீனா தயாராக இருந் தாலும், அமெரிக்கா சண்டையிட முற்பட்டால், “நாங்களும் இறுதி வரை சண்டையிடுவோம்” என்று சீன ஊடகங்கள் கங்கணம் கட்டின. எனவே, ஊடகங்களின் நிலைப்பாட்டையே அதிபர் ஸியின் கருத்துகள் எதிரொலிப்ப தாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

ஹுவாவெய்க்குத் தடை

சீனாவுடனான வர்த்தக பேச்சு வார்த்தைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படலாம் என்ற காரணத்தால் சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவா வெய்க்கு எதிராக தடை விதிப்பதை டிரம்ப் நிர்வாகம் முன்னதாக தவிர்த்திருந்ததாக இந்த விவ காரம் பற்றித் தெரிந்த சிலர் கூறி உள்ளனர். எனினும், கடைசி சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக் கட்டை போடப்பட்டதையடுத்து ஹுவாவெய்க்கு அமெரிக்கா தடை விதித்ததாக அவர்கள் கூறினர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon