இலங்கையில் பயங்கரவாதத் தாக் குதல்கள் நிகழ்ந்து ஒரு மாதமாகி விட்ட நிலையிலும் பொய்ச் செய்தி களும் தவறான தகவல்களும் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியா மல் அந்நாட்டு அரசாங்கம் திணறி வருகிறது.
கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்களைக் குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் நிகழ்த்திய தாக்குதல்களில் 250க்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர்; ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு ஒன்பது நாள் தடை விதிக்கப்பட்டது.
ஆயினும், இணையவாசிகள் பலரும் 'விபிஎன்' எனப்படும் மெய் நிகர் தனியார் இணையக் கட்ட மைப்பின் மூலம் சமூக ஊடகங்கள் வழியாகத் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது.
அதே நேரத்தில், ஒரு சிலர் வெறுப்பைத் தூண்டவும் குழப் பத்தை ஏற்படுத்தவும் அவற்றைப் பயன்படுத்தினர்.
ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட ஒரு காணொளி, புர்கா அணிந் திருந்த ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய்ததாகவும் அவருக்கு வெடிகுண்டுத் தாக்குதல்களில் தொடர்பிருந்ததாகவும் கூறியது. ஆனால், உண்மையில் அந்தக் காணொளி 2018ல் எடுக்கப்பட்டது. கடன் பிரச்சினை தொடர்பில் ஒருவரைத் தாக்குவதற்காக அந்த ஆடவர் புர்கா அணிந்து தமது அடையாளத்தை மறைத்ததாகக் கூறப்பட்டது.

