இந்தோனீசியா: அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்துப் போராட்டம்; பெரும் வன்முறை

இந்தோனீசியா: அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்துப் போராட்டம்; பெரும் வன்முறை

1 mins read
ccbe13ca-5917-4a41-89ce-02dae99ea9ab
இந்தோனீசிய அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பிரபோவோ சுபியாந்தோவின் ஆதரவாளர்கள் ஜகார்த்தாவில் நேற்று முன்தினம் இரவிலிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலிசாரும் ராணுவத்தினரும் கண்ணீர்ப் புகை, ரப்பர் குண்டுகளால் சுட்டு வன்முறையில் இறங்கியோரைக் கலைக்க முயன்றனர். படம்: ஏஎஃப்பி -

இந்தோனீசிய அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் அறுவர் மரணமடைந்தனர்; கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர்.

வன்முறையைத் தூண்டிவிட்ட தாகக் கூறி 58 பேரைக் கைது செய்துள்ளதாக போலிஸ் தலை வர் முகம்மது இக்பால் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். மூன்று போலிஸ் வாகனங்கள் உட்பட 14 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

"இந்த வன்முறைச் சம்பவங் கள் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. அவை திட்டமிட்டு நிகழ்த் தப்பட்டன," என்றார் அவர். பணத்தாட்கள் வைக்கப்பட்ட சில உறைகளும் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 17ஆம் தேதி இந்தோனீசிய அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதிபர் ஜோக்கோ விடோடோவும் அவரை எதிர்த்து பிரபோவோ சுபியாந்தோவும் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 55.5% வாக்குகளைப் பெற்று விடோடோ வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் அறிவித்தது.

ஆனால், தேர்தலில் முறை கேடுகள் இடம்பெற்றதால் இந்த முடிவை ஏற்க முடியாது என்ற திரு பிரபோவோ, அதை எதிர்த்து சட்டரீதியாகப் போராடப்போவதாகவும் சொன்னார்.