இந்திய ராணுவ அலுவலகத்தில் திருட்டு

இந்திய ராணுவ அலுவலகத்தில் திருட்டு

1 mins read

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அருகில் உள்ள அலுவலகத்திலிருந்து முக்கியமான சில ஆவணங்களும் பணமும் திருடப்பட்டிருப்பதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த அலுவலகத்தை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது. பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானங்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

சர்ச்சைக்குரிய 9.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை ஒற்றர்கள் திருடியிருக்கலாம் என்று இந்தியா வின் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.