இந்தோனீசிய கலவரத்தில் ஐஎஸ் ஆதரவாளர்கள்

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கலவரத்தில் மாண்ட அறுவரில் நால்வர் கத்திக் குத்து காரணமாக உயிர் இழந்ததாக தெரியவந்துள்ளது.

மற்ற இருவரின் மரணத்துக் கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, மத்திய ஜகார்த்தாவிலும் மேற்கு ஜகார்த் தாவிலும் நிகழ்ந்த மூன்று கலவரங்கள் குறித்து இந்தோனீசிய போலிசார் விசாரணை நடத்து கின்றனர்.

கடந்த மாதம் 17ஆம் தேதியன்று நடைபெற்ற இந்தோ னீசிய அதிபர் தேர்தலில் 55.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றதாகக் கடந்த செவ்வாய்க் கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது.

மேற்கு ஜகார்த்தாவில் உள்ள போலிஸ் குடியிருப்பைக் கும்பல் ஒன்று தாக்கியதாக தெரிவிக்கப் பட்டது.

“இந்தக் கும்பல் தேர்தல் முடிவில் அதிருப்தி அடைந்து கலவரம் நடத்தியவர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. தாக்கப்பட்ட போலிஸ் குடியிருப்பில் பல ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று இந்தோனீசியப் போலிஸ் படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித் தார்.

போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐவர் மாண்டதாக முதலில் சந்தேகிக்கப்பட்டது. தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் கலவரக் காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை மட்டுமே வீசியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

இரண்டு நாள் கலவரத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நிலவரப்படி 257 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். கடித உறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

கலவரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களில் இருவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு விசுவாசமாக செயல் பட்டு வரும் அமைப்பைச் சேர்ந்த வர்கள் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பு இந்தோனீசியா வில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்தோனீசிய போலிசார் கூறினர்.

“மே 21, 22 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த கலவரத்தின்போது பயங்கரவாத தாக்குதலை நடத்த அந்த இருவரும் திட்டமிட்டிருந் தனர்,” என்று இந்தோனீசிய போலிஸ் படையின் செய்தித் தொடர்பாளர் முகம்மது இக்பால் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தோனீசியா வின் களிமந்தான் மாகாணத்தின் பொன்தியானாக் நகரிலும் கலவரம் வெடித்தது. கோத்தா பொன்தியானாக்கில் இருந்த இரண்டு போலிஸ் சாவடிகளுக்கு கலவரக்காரர்கள் தீவைத்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

நேற்றைய நிலவரப்படி பொன்தி யானாக்கில் 38 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!