தென் சீனக் கடல்: அமெரிக்கா கடும் நடவடிக்கை

தென் சீனக் கடல்: அமெரிக்கா கடும் நடவடிக்கை

1 mins read
1d09a963-fba0-40e9-8c0a-517268ce43bb
-

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சீனாவுக்கு உதவிவரும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் எதிராகத் தண்டனைத் தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான மசோதாவை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மார்க்கோ ரூபியோவும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பென் கார்டினும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.  வான்வெளிகள்   மீதும் கடற்பகுதிகள் மீதும் சீனா ஆதிக்கம் செலுத்த முயல்வதைக் கட்டுப்படுத்துவது அந்த மசோதாவின் நோக்கம். வியட்னாம், ஃபிலிப்பீன்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் தென் சீனக் கடலில் சர்ச்சைகள் நிலவுகின்றன.