ஈப்போ : நாயைச் சுட்ட ஆடவர்

ஈப்போ : நாயைச் சுட்ட ஆடவர்

1 mins read
731454e8-9095-4e48-a4fd-19a8f94d20b9
-

மலேசியாவின் ஈப்போ மாநில நகர மண்டப ஊழியர் ஒருவர் நாயைச் சுட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த நாய் ரத்தம் சிந்தி துடித்துக்கொண்டிருந்தபோது அதனை அந்த ஊழியர் மறுபடியும் சுட்டுக்கொன்றார். அந்தக் காட்சியைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் ஊழியரைக் கோபமாகத் திட்டுவதும் காணொளியில் பதிவானது.

இறந்துபோன நாய்க்குத் தினமும் உணவு கொடுத்துவந்த குடியிருப்பாளர் ஒருவர் இந்தச் சம்பவத்தைக் காணொளி எடுத்ததாக நம்பப்படுகிறது. ஊழியரின் இந்தச் செயலை விலங்கு நல ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்