வாஷிங்டன்: அமெரிக்க=சீன வர்த்தக ஒப்பந்தத்தில் ஹுவாவெய் நிறுவனத்தையும் சேர்த்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹுவாவெய் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் புகார்களுக்கு அமெரிக்க=சீன வர்த்தக ஒப்பந்தம் மூலம் தீர்வு காணக்கூடும் என்றார் அதிபர் டிரம்ப்.
அதே சமயத்தில் ஹுவாவெய்யை அபாயகரமான நிறுவனம் என்று அவர் வர்ணித்தார்.
இதற்கிடையே, சீன அரசாங்கத்துடன் தனது நிறுவனத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து ஹுவாவெய் நிறுவனத்தின் நிறுவனர் ரென் செங்ஃபேய் பொய் கூறி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். ஹுவாவெய் நிறுவனத் துடனான உறவை மேலும் பல அமெரிக்க நிறுவனங்கள் துண்டித்துக்கொள்ளும் என்று தாம் நம்புவதாக திரு பொம்பியோ கூறினார். பொம்பியோவின் இந்தக் கருத்துகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்தது