92 வயது மூதாட்டியைக் கொன்றதாக 102 வயது மூதாட்டிமீது சந்தேகம்

92 வயது மூதாட்டியைக் கொன்றதாக 102 வயது மூதாட்டிமீது சந்தேகம்

1 mins read

லில்: பிரான்ஸில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த 92 வயது மூதாட்டியை 102 வயதுடைய இன்னொரு இல்லவாசி கொன்றதன் சந்தேகத்தில் மனநல இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீங்கிய முகத்துடன் இறந்தவர் உடல் அவரின் இல்ல அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. கழுத்து நெரிக்கப் பட்டதுடன் தலையில் பலத்த காயங்களும் இருந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. இதற்கிடையே 102 வயது மூதாட்டி, பதற்றத்துடன் காணப்பட்டதோடு தான் ஒருவரைக் கொன்றுவிட்டதாக இல்லத்தின் மருத்துவ ஊழியர் ஒருவரிடமும் கூறியிருந்தார். ஒரு நிதானமற்ற, குழப்ப நிலையில் காணப்பட்ட அம்மூதாட்டி கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் மனநல இல்லத் திற்கு மாற்றப்பட்டுள்ளார். விசாரணை நடத்த முடியாத நிலையில் மூதாட்டி இருந்தாலும் சட்டவிரோதமாக நடந்து கொண்டதன் பேரில் அவர் முறையான மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.