ஒரே வாரத்தில் 10 உயிர்களை மாய்த்த எவரெஸ்ட்

ஒரே வாரத்தில் 10 உயிர்களை மாய்த்த எவரெஸ்ட்

1 mins read

காட்மாண்டு: ஏழே நாட்களில் குறைந்தது பத்து பேர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் பயணத்தில் தங்கள் உயிர்களை விட்டுள்ளனர். கடந்த சில நாட் களாகப் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகிறது உலகின் ஆக உயரமான எவரெஸ்ட் சிகரம். ஆனால் இந்தப் பருவக்காலத்தில் குறைந்தது 20 பேர் இறந்து விட்டனர். சிகரத்தைத் தொட்டவர்கள் மறுபடியும் கீழே இறங்குவதற்காகக் காத்திருக்கும்போது தங்கள் உயிர்களை விட்டனர். களைப்பு, உயரம், கனமான பைகள் போன்றவற்றிற்கும் மேல் பயணத்தின்போது ஏற்படும் நெரிசல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாக இருந்து வருகிறது.