பாரிசில் வெடிப்பு; 13 பேர் காயம்

பாரிஸ்: பிரான்ஸ் நகர் லியோனில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிப் புச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

வெடிப்புச் சாதனம் ஒன்றால் இச்சம்பவம் ஏற்பட்டதாகச் சந் தேகிக்கப்படுகிறது.

சாதனத்தின் இயல்பு எத்தகை யது என்று உறுதியாகத் தெரிய வில்லை. அத்துடன் தாக்குதல் நடத்தியதாக எந்த ஓர் அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதற்கிடையே இவ்வெடிப்புச் சம்பவம் ஒரு தாக்குதல்தான் என்று அதிபர் இம்மானுவல் மெக்ரோன், யுடியூப் நேரடிப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாதச் சம் பவம் தொடர்பில் விசாரணையை பாரிஸ் நீதிமன்றம் தொடங்கி உள்ளது.

சுற்றுப்பயணிகள், உள்ளூர் வாசிகள் ஆகியோர் பெரிதும் விரும்பிச் செல்லும் ஒரு பிரபல மான பகுதியில் இச்சம்பவம் நடந் துள்ளது.

இதற்கிடையே வெடிப்பு நிகழ் வதற்கு முன் ஓர் இளைஞர் மிதி வண்டியில் வந்து ஒரு ரொட்டி கடை முன்னால் ஒரு பையை வைத்ததாகச் சாட்சிகள் கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த இளைஞரை போலிசார் தேடி வருகின்றனர்.

வெடிப்புச் சாதனத்தைத் தயாரிக்க உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது. சாதனம் வைக்கப்படும் இடத்தின் அருகில் உள்ளவர் களுக்கு ஆபத்து விளைவிக்க வேண்டும் என்ற திட்டம் இருந் திருப்பதாகவும் நம்பப்படுகிறது. 

வெடிப்புச் சாதனத்தை வைத்த சந்தேக நபரை அவ்வட்டாரத்தில் அமைந்துள்ள பல்வேறு கண் காணிப்பு கேமராக்கள் பதிவு செய்துள்ளன. வெடிப்புச் சம் பவத்தை அடுத்து எங்கும் குப் பையும் உடைந்த கண்ணாடியு மாகக் காணப்பட்டதாகக் கூறப் படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து பொது இடங்களிலும் விளை யாட்டு, கலாசார, சமய நிகழ்வு களிலும் பாதுகாப்பைக் கடுமை யாக்குமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் நாட்டு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள இரு மெட்ரோ ரயில் நிலையங்களை முன்னெச்சரிக்கையாக மூடியுள்ள தாக லியோன் போலிசார் தெரி வித்தனர்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரெஞ்சு மக்கள் ஆயத்தமாகி வரும் நேரத்தில் இவ்வெடிப்புச் சம்பவம் நடந்து உள்ளது.  

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon