ஐஎஸ் ஊடுருவல்: கேரள கடலோரப் பகுதியில் விழிப்புநிலை

ஐஎஸ் ஊடுருவல்: கேரள கடலோரப் பகுதியில் விழிப்புநிலை

2 mins read

இலங்கையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 15 பேர் படகு மூலம் லட்சத்தீவை நோக்கி கிளம்பியிருப்பதாக உளவுத்தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தியா வின் கேரள மாநிலக் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

அதிக விழிப்புடன் இருக்கும் படி கேரளாவின் கடலோரப் பகுதி களில் உள்ள காவல் நிலையங் களும் கடலோர மாவட்ட போலிஸ் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.

"இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுவது வழக்கமானது தான் என்றாலும் இம்முறை இத் தனை பயங்கரவாதிகள் புறப்பட்டு உள்ளனர் எனக் குறிப்பாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் சந்தேகப் படும்படியான படகுகள் எதுவும் தென்பட்டால் அதிக விழிப்புடன் இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என்று போலிஸ் உயரதிகாரி ஒருவர் சொன்னதாக 'பிடிஐ' செய்தி தெரிவித்தது.

இம்மாதம் 22ஆம் தேதி இலங்கை அரசிடம் இருந்து இந்த வேவுத்தகவல் கிடைத்தது என்றும் அதற்கு மறுநாளில் இருந்து கட லோரக் காவல்துறை அதிக விழிப் புடன் இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

"இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்ததில் இருந்தே அதிக விழிப்புடன் இருந்து வரு கிறோம். சந்தேகத்திற்குரிய நட வடிக்கைகள் குறித்து எச்சரிக்கை யுடன் இருக்கும்படி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் களையும் அறிவுறுத்தியுள்ளோம்," என்று கடலோரக் காவல்துறை வட்டாரங்கள் கூறின.

இலங்கை பயங்கரவாதத் தாக் குதல்களுக்குப் பிறகு ஐஎஸ் அமைப்பினர் கேரளாவில் தாக் குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணைகள் மூலம் தெரிய வந்தது. கேரளாவைச் சேர்ந்த பலர் இன்னும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் நம்புகின்றன.

கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் தேவாலயங்களிலும் ஹோட்டல் களிலும் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 250க் கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.2