'ஜப்பான் தேர்தலுக்குப் பிறகு வர்த்தக உடன்பாடு'

'ஜப்பான் தேர்தலுக்குப் பிறகு வர்த்தக உடன்பாடு'

2 mins read

தோக்கியோ: ஜப்பானில் நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிறகு அந் நாட்டுடனான வர்த்தகப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்று சூசகமாகத் தெரிவித்து உள்ளார் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்.

நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள டிரம்ப், அந் நாட்டு பிரதமர் ‌ஷின்சோ அபேவு டன் நேற்று கோல்ஃப் விளையாடினார்.

கோல்ஃப் விளையாட்டிற்குப் பிறகு தோக்கியோ திரும்பிய டிரம்ப், "ஜப்பானுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் விவசாயம், மாட்டிறைச்சி முக்கிய மானவை.

"ஜப்பானில் நடைபெறவுள்ள ஜூலை மாத தேர்தலுக்குப் பின் இன்னும் பெரும் முன்னேற்றம் நிகழும் என எண்ணுகிறேன்," என்று டுவிட் செய்துள்ளார்.

இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் டிரம்ப் பின் இப்பயணம் இருந்தாலும் வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கெனவே சீன-அமெரிக்க வர்த்தக போர் அனைத்துலக நிதி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அளவுக்கதிகமான உபரி வர்த்தகத்தால் அதிருப்தியில் உள்ளார் டிரம்ப். ஒருவேளை இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என் றால், ஜப்பானின் வாகன ஏற்று மதிகள் மீது கூடுதல் வரிகள் விதிப்பது குறித்து டிரம்ப் பரிசீ லித்து வருவதாகவும் கூறப்படு கிறது.

முன்னதாக, வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் தனக்கு எந்த கலக்கமும் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

ஜப்பான் சென்றடைந்த சில மணி நேரங்களில் வடகொரியா பற்றி டுவிட் செய்த டிரம்ப், "சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இத னால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலரும் வேறு சிலரும் கலக்கமடைந்துள்ளனர்.

"ஆனால் எனக்கு எந்த கலக்கமும் இல்லை. கிம் எனக்கு அளித்த வாக்குறுதியைக் காத்தி டுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," எனப் பதிவிட்டிருந் தார்.

ஆனால் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோகர் போல்டனும் ஜப்பான் பிரதமர் அபேவும் ஏவு கணை சோதனையால் ஐநாவின் தீர்மானத்தை வடகொரியா மீறிய தாகக் கூறியிருந்தனர்.

டிரம்ப்--அபே இடையிலான இச் சந்திப்பில் வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு, ஈரான் விவ காரம் ஆகியவைக் குறித்து விவா திக்கப்படும் எனத் தெரிகிறது.