சிலாங்கூர்: பாதுகாவலர் ஒருவர் அம்பாங் ஜெயாவின் பாண்டான் இன்டா பகுதியில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் தன் நாயுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பைத் தொட்டியைப் பார்த்து அந்நாய் குரைத்த தால், அவர் அதன் அருகில் சென்று பார்த்தார். அதில் பிறந்த குழந்தை ஒன்று தொப்புள்கொடியோடு கிடப்பதைப் பார்த்து போலிசுக்குத் தகவல் கொடுத்தார். அக்குழந்தை நலமாக உள்ளதாக பெர்னாமா செய்தி குறிப்பிடுகிறது.
குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்த குழந்தையைக் கண்டுபிடித்த நாய்
1 mins read

