சலவை இயந்திரத்தில் மாட்டிக்கொண்ட எட்டு வயது சிறுமி பத்திரமாக மீட்பு

சலவை இயந்திரத்தில் மாட்டிக்கொண்ட எட்டு வயது சிறுமி பத்திரமாக மீட்பு

1 mins read

ஜோகூர் பாரு: சுயசேவை சலவை மையத்தில் உள்ள சலவை இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட எட்டு வயது சிறுமியை லர்கின் பகுதி தீ, மீட்பு படையினர் காப்பாற்றினர்.

விளையாடிக் கொண்டிருந்த அப்பெண், மையத்திற்குள் நுழைந்து சலவை இயந்திரத்திற்குள் சென்றவுடன் அவளது நண்பர்கள் அதன் கதவை மூடிவிட்டுச் சென்றுவிட்டனர்.

சலவை மையத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் இயந்திரத்தைப் பயன்படுத்த முற்பட்டபோது, அதில் சிறுமி இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, பூட்டை உடைத்து மூன்று நிமிடங்களில் சிறுமி காப்பாற்றப்பட்டார்.