'கருக்கலைப்பு கொலை செய்வதற்கு சமம்'

1 mins read

வாடிகன்: கருக்கலைப்பை ஏற்க முடியாது என்றும் கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்குச் சமம் என்றும் புனித போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கருக்கலைப்புக்கு எதிரான மாநாட்டில் பேசிய அவர், கருக்கலைப்பு விவகாரம் ஒரு மத ரீதியான பிரச்சினையல்ல, மாறாக மனிதாபிமான பிரச்சினை என்றார்.

பலர் கரு ஆரோக்கியமாக இல்லையென்பதால் கருக்கலைப்பு செய்வதைச் சுட்டிக்காட்டிய போப், மிகவும் பலவீனமான முறையில் பிறந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை வரவேற்குமாறும் கூறினார். மருத்துவ உதவிகளை நாடுமாறும் அவர் சொன்னார்.