ரோஹிங்யா படுகொலை: ராணுவ அதிகாரிகளுக்கு விடுதலை

ரோஹிங்யா படுகொலை: ராணுவ அதிகாரிகளுக்கு விடுதலை

1 mins read
2b3fcc82-0d11-4d60-a442-9cc2a8963944
-

ரோஹிங்யா மக்கள் பத்து பேரைக் கொலை செய்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு ராணுவ அதிகாரிகளுக்கு மியன்மார் முன்கூட்டியே விடுதலை அளித்துள்ளது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையில் ஓராண்டுக்குக் குறைவான காலத்திற்கு மட்டுமே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொலைகளைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களைவிடக் குறைவான காலத்திற்கு அந்த ராணுவ அதிகாரிகள் சிறையில் இருந்தனர். நாட்டின் ரகசியங்களைப் பெற்றதன் தொடர்பில் தண்டிக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள், 16 மாதங்களுக்கு மேலாகச் சிறையில் இருந்த பிறகே மே 6ஆம் தேதி விடுதலை பெற்றனர். மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் தொடர்பில் இந்த எழுவரின் கைது மட்டுமே இதுவரையில் அந்நாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரே நடவடிக்கையாக உள்ளது.