போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காக மலேசிய நாட்டவ ரான பன்னீர்செல்வம் பரந்தாம னுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவ தற்கு ஒரு நாள் முன்பு சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம் அதை நிறுத்தி வைத்த முடிவில் தாம் தலையிடவில்லை என மலேசிய சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் கூறியுள்ளார். இதன் தொடர்பில் சிங்கப்பூரில் சிலர் கடந்த சில நாட்களாக தம்மீது கடுமையாக குற்றஞ்சாட்டுவதாக திரு லியூ கூறியுள்ளார்.
"சிங்கப்பூரின் நீதி அமைப்பில் நான் தலையிட்டதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது, அடிப் படையற்றது," என நேற்று முன் தினம் திரு லியூ (படம்) கூறினார்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி 51.48 கிராம் ஹெராயினைக் கடத்தியதாக 2017ஆம் ஆண்டு பன்னீர்செல்வத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இம்மாதம் 22ஆம் தேதி, தமது மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மனு செய்ததாகக் கூறப்பட்டது. அதற்கு அடுத்த நாள், பன்னீர்செல்வத்தின் வழக் கறிஞரின் வாதத்தைக் கேட்ட பிறகு, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து கடந்த வாரம் திங்கட்கிழமை தமக்குத் தெரிய வந்ததாக திரு லியூ கூறினார்.
பன்னீர்செல்வத்தின் மரண தண்டனையின் தொடர்பில் திரு லியூ மற்றும் மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டுமென பன்னீர் செல்வத்தின் குடும்பத்தார் ஊடக அறிக்கை வெளியிட்டனர். சிங்கப்பூரின் சட்ட மூத்த துணை அமைச்சரிடம் இது குறித்து கடந்த புதன்கிழமை பிற்பகலில் பேசியதாக திரு லியூ கூறினார்.
"நேர நெருக்கடி காரணமாக சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இது குறித்து தொடர்புகொள்ள எங்க ளுடைய வெளியுறவு அமைச்சிடம் அனுமதி பெற்று, செல்லுபடியாகக் கூடிய சட்ட அடிப்படையில் மின்னஞ்சல் மூலம் முறையிட் டேன்," என்றார் திரு லியூ.
"குற்றத்திற்காக விதிக்கப்பட்ட மரண தண்டனையை மலேசியர் கள் என்பதற்காக விலக்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்வது சட்டத்தின் மாட்சிமை யைக் கீழறுப்பதாகும்," என்று கடந்த வெள்ளிக்கிழமை சட்ட அமைச்சர் கா.சண்முகம் குறிப்பிட்டதாக செய்தி வெளியானது.

