தோக்கியோ: அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே கூடுதல் வர்த்தக உடன்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித் துள்ளார்.
ஜப்பானுக்கு நான்கு நாள் அரசு பூர்வ பயண0ம் மேற்கொண் டிருக்கும் திரு டிரம்ப், நேற்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயுடன் பேச்சு நடத்திய பிறகு இவ்வாறு அறிவித்தார்.
வர்த்தகத் தடைகளை அகற் றுவதன் மூலம் ஜப்பானில் அமெ ரிக்க இறக்குமதிகளுக்கு அதிக இடம் கிடைக்க வழி வகுப்பதே திரு டிரம்பின் இலக்கு.
வரும் ஜூலை மாதத்தில் ஆளும் கட்சி தேர்தலைச் சந்திக்க இருக்கும் வேளையில், அதில் திரு அபேக்கு அதிக காலம் கொடுக்கும் வகையில், தேர்தலுக் குப் பிறகு வரும் ஆகஸ்ட் மாதத் தில் அமெரிக்க-ஜப்பான் வர்த்தக உடன்பாடு பற்றி கூடுதல் அறிவிப் புகள் வெளியிடப்படலாம் என்றும் திரு டிரம்ப் சொன்னார்.
"அமெரிக்காவுக்கும் ஜப்பானுக் கும் இடையிலான வர்த்தகத்தில் சமநிலையற்றத்தன்மை உள்ளது. அதற்குத் தீர்வு காண இரு நாடு களும் பணியாற்றும் என்றும் திரு அபேயுடனான உச்சநிலைச் சந்திப் புக்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார். பின்னர் பேசிய திரு அபே, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சநிலை மாநாட்டின்போது தாமும் திரு டிரம்பும் வடகொரியா, அமெரிக்க-ஜப்பான் பொருளியல் விவகாரங்கள் பற்றி பேசவிருப்ப தாகவும் கூறினார்.
மேலும் தாம், வடகொரியத் தலைவர் கின் ஜோங் உன்னுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் தமது முழு ஆதரவைத் தெரிவித் துள்ளார் என்றும் திரு அபே கூறி னார்.
"வடகொரியத் தலைவர் கிம் முடன் நேருக்கு நேர் சந்தித்து வெளிப்படையான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு அதிபர் டிரம்பின் முழு ஆதரவு கிடைத்துள்ளது," என்றார் ஜப்பானியப் பிரதமர்.
இகற்கிடையே, திரு அபேயுடன் நேற்று நடைபெற்ற கூட்டு செய்தி யாளர் கூட்டத்தில் பேசிய திரு டிரம்ப், "சீனாவுடன் வர்த்தக உடன்பாடு செய்துகொள்ள காலம் இன்னும் கனியவில்லை. அவர்கள் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருக்கலாம். ஆனால் நாங்கள் தயாராக இல்லை.
"சீன இறக்குமதிகளுக்கான அமெரிக்காவின் சுங்க வரி மிகக் கணிசமாக, மிக எளிதாக உயரக் கூடும்," என்றும் அமெரிக்க அதி பர் கோடிக்காட்டினார்.

