ஜகார்த்தாவில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு புதிய சந்தேக நபர்களை இந்தோனீசிய அதிகாரிகள் அடையாளப்படுத்தியுள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு, நாட்டின் உயர் அதிகாரிகளைக் கொல்வதற்காகப் பணம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. மார்ச் மாதத்தில் மத்திய அரசாங்க அதிகாரிகள் இருவரையும் ஏப்ரல் மாதத்தில் மாநில அதிகாரிகள் இருவரையும் கொல்ல அந்தச் சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாக தேசிய போலிஸ் பேச்சாளர் முகம்மது இக்பால் தெரிவித்தார். சந்தேக நபர்களின் அடையாளங்களை வெளியிட போலிசார் மறுத்துள்ளனர். கொலைகளைச் செய்து முடிக்க ஒருவருக்கு 150 மில்லியன் ரூபியா கொடுக்கப்பட்டது. மற்றொருவருக்கு 25 மில்லியன் ரூபியா கொடுக்கப்பட்டது. இந்தக் கொலைகாரர்களைப் பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை உண்டாக்குவது இதனைத் திட்டமிட்டவர்களின் நோக்கம் என்று இன்ஸ்பெட்கர் ஜெனரல் இக்பால் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாட்டுத் தலைவர்களைக் கொல்ல இந்தோனீசியாவில் திட்டம்
1 mins read
-

