வயிற்றுக்குள் போதைப்பொருள் வைத்திருந்த விமானப் பயணி நடுவானில் மரணம்

வயிற்றுக்குள் போதைப்பொருள் வைத்திருந்த விமானப் பயணி நடுவானில் மரணம்

1 mins read
b884f524-8730-4e09-8efd-89d940f9be75
-

வயிற்றுக்குள் 246 'கொக்கெய்ன்' போதைப்பொருள் பொட்டலங்களை வைத்திருந்த ஜப்பானிய ஆடவர் விமானப் பயணத்தின்போது உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் கொலம்பியாவின் பொகோட்டா நகரிலிருந்து தோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானம், மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்கவேண்டியிருந்தது. போதைப்பொருள் கும்பல் ஒன்றுக்காக அந்த ஆடவர் செயல்பட்டதாக மெக்சிகோ அதிகாரிகள் நம்புகின்றனர். பொட்டலங்களை விழுங்கி தனது வயிற்றுக்குள் வைத்திருந்த அந்த ஆடவருக்கு விமானத்தில் வலிப்பு ஏற்பட்டதை விமானப் பணியாளர்கள் கவனித்ததாக மெக்சிகோ அதிகாரிகள் கூறினர். போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் அவரது மூளையில் வீக்கம் ஏற்பட்டதாகப் பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது.