பாகிஸ்தானின் தெற்குப் பகுதியிலுள்ள சிந்து மாநிலத்தில் இந்துவாக இருக்கும் ஒரு விலங்கு மருத்துவர், மருந்துகளைப் பொட்டலமிட புனித நூல்களின் பக்கங்களைக் கிழித்துப் பயன்படுத்தியதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இணைய ஊடகத்தளங்கள் குறிப்பிடுகின்றன. அவர் கைதுக்கு அடுத்து ஆர்ப்பாட்டக்கார்கள் வீதிகளில் கூச்சலிட்டு பொதுச் சொத்துகளை நாசம் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தானிய அதிகாரிகள் அவர்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

