42 கைதிகள் உயிரிழப்பு

42 கைதிகள் உயிரிழப்பு

2 mins read
f3ea89f2-4188-40b2-b027-913b69ffddb4
கைதிகளின் மரணத்தைக் கேள்விப்பட்டு சோகம் தாளாமல் சிறைச்சாலைக்கு வெளியே நின்று துயரத்தை வெளிப்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள். படம்: ஏஎஃப்பி -

சாவ் பாவ்லோ: பிரேசிலின் அமசான் பகுதியிலுள்ள மனாயஸ் எனும் நகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவர மாக வெடித்ததில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

அதற்கு முந்தைய நாளன்று சிறைக் கைதிகளுக்கிடையே மூண்ட மோதலில் 15 பேர் உயிர் இழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

திடீர் கலவரம் தொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிலை மையைக் கட்டுப்படுத்த சிறை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வன்முறையை நிறுத்த எடுக்கப் பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய பணிக்குழு ஒன்று நேற்று மனாயஸுக்கு அனுப்பப்பட்டது.

பிரேசிலில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சிறை அறை களில் இரு மடங்கு கைதிகள் அடைக்கப்படுவதாக கூறப்படு கிறது. அந்நாட்டின் அமசோனஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடை பெறுவதால் அங்குள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழி கிறது.

கைதிகள் மோதிக்கொள்ளும் இதே போன்ற சம்பவம் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. வடக்கு மற்றும் வடகிழக்கு பிரேசிலில் மூன்று வாரங்கள் நீடித்த வன்முறையில் கிட்டத்தட்ட 150 கைதிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் சிறைகளைக் கட்டுக்குள் கொண்டுவரப் போவதாக அதிபர் ஜயார் போல்சேனாரூ சூளுரைத்து உள்ளார். சிறைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இன்னும் கூடுதலான சிறை களை அரசாங்கம் கட்டும் என்றார் அவர்.

உலகிலேயே அதிகமான கைதி களைக் கொண்ட நாடுகளில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 726,712 கைதிகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை இப்போது 368,049ஆக குறைந்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.