பத்து ஆண்டுகளில் முதன்முறையாக தண்ணீர் கட்டுப்பாடு விதிக்கும் சிட்னி

பத்து ஆண்டுகளில் முதன்முறையாக தண்ணீர் கட்டுப்பாடு விதிக்கும் சிட்னி

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் முக்கிய நகர்களில் ஒன்றான சிட்னியில் வறட்சி நிலவிவரும் வேளையில், பத்து ஆண்டுகளில் முதன்முறையாக அந்நகர் வீடு களுக்கும் வர்த்தகங்களுக்கும் தண்ணீர் கட்டுப்பாடு விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு அடுத்த வாரம் நடப்புக்கு வரும் என்று நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் நேற்று தெரி வித்தது.

1940ஆம் ஆண்டிற்குப் பின் தற்போது அந்நகரில் தண்ணீர் வரத்து மிகக் குறைந்த அளவில் காணப்படு கிறது.

தோட்டங்களில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற ரப்பர்க்குழாயைத் திறந்த நிலையில் வைப்போருக்கு 220 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படலாம். அதே காரி யத்தைச் செய்யும் வர்த்தகங் களுக்கு அபராதம் 550 டாலர் வரை போகலாம்.

சிட்னியில் கடைசியாக 2009ல் தண்ணீர் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பல ஆண்டு காலமாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது.