கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து அந்நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளதால் சுற்றுப்பயணி களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி உலக நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத் தன்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப் பட்டனர். இதையடுத்து அமெ ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அறி வுறுத்தின. இதனால், சுற்றுலாத் துறையைப் பெரிதும் நம்பியுள்ள இலங்கையில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதால் பொரு ளியல் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு நாடு களின் தூதர்களைச் சந்தித்துப் பேசிய அதிபர் சிறிசேன, நாட்டின் பாதுகாப்பு நிலைமை சீரடைந்து உள்ளதால் அவசரநிலை மீண்டும் நீட்டிக்கப்படாது என உறுதி அளித்தார்.
பாதுகாப்புப் பிரிவினருக்குப் பாதுகாப்பு வசதிகளை ஏற் படுத்திக் கொடுக்கும் நோக் கிலேயே அவசரகால சட்டத்தைத் தாம் அமல்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இயல்புநிலை திரும்பியுள்ள தால் இலங்கைக்கு வரும் சுற்றுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளை நீக்கு மாறு பல்வேறு நாடுகளின் தூதர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

