தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் கத்திக்குத்து; பள்ளி மாணவி உட்பட மூவர் மரணம்

2 mins read
ad6fa483-9169-4ce6-b35f-27da34726d31
-

ஜப்பான் நாட்டின் கவசாக்கி நகரத்தில் உள்ள பேருந்து நிறுத் தம் ஒன்றில் நின்றிருந்த பள்ளி மாணவிகள் மீது ஆடவர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி யதில் 12 வயது மாணவி ஒருவரும் 39 வயது ஆடவர் ஒருவரும் மாண்டனர்; பெண் ஒருவர் உட்பட மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

இந்த வெறியாட்டத்திற்குப் பிறகு 50களில் இருந்த அந்தச் சந்தேகப் பேர்வழியும் தனது கழுத் தில் தானே குத்திக்கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரு கைகளிலும் கத்தியைப் பிடித்துக்கொண்டு அந்த ஆடவர் கண்ணில் பட்டோரை எல்லாம் தாக்கினார்.

அவரது செயலுக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.

காயமடைந்தவர்களில் 15 பேர் பள்ளி மாணவிகள் எனத் தெரி விக்கப்பட்டது. தாக்குதலில் உயிரி ழந்த 39 வயது ஆடவர் அந்த மாணவியருள் ஒருவரின் தந்தை எனக் கூறப்படுகிறது.

காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கரிட்டாஸ் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற் காக பேருந்து நிறுத்தத்தில் காத் திருந்தனர். அப்போது, ஆடவர் ஒருவர் மாணவியரை நோக்கிச் சென்றதைக் கண்டதாக கரிட்டாஸ் பள்ளிப் பேருந்தின் நடத்துநர் கூறினார். மாணவியரைக் கத்தி யால் குத்திய அந்த ஆடவர், பின்னர் பேருந்தில் ஏறி அதில் இருந்த குழந்தைகளையும் கத்தி யால் தாக்கினார்.

"நான் உங்களைக் கொல்லப் போகிறேன்," என்று அந்த ஆடவர் கத்தியதாக 'கியோடோ' செய்தி கூறியது. பின் தன்னையே குத்திக் கொண்டு அவர் இறந்துபோனார்.

இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஸே„ அபே, அதை நினைத்து தமக்கு ஆத்திரம் ஆத் திரமாக வருவதாகக் கூறினார்.

"இது மிகவும் துயரமானதொரு சம்பவம். மாண்டோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவர் என நம்பு கிறேன்," என்றார் திரு அபே.

அதிகாரபூர்வப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்