மக்களைக் கவரக்கூடியவர்களைத் தேடும் பிரஞ்சு அதிபர்

மக்களைக் கவரக்கூடியவர்களைத் தேடும் பிரஞ்சு அதிபர்

1 mins read
5009189b-4088-4f18-966e-39e55f820d29
-

ஐரோப்பிய ஒன்றியத்தை வழிநடத்த கவர்ச்சிகரமான ஆண்களையும் பெண்களையும் தேடுவதாக பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். ஆயினும், இதற்காக ஏற்கெனவே சிலரை யோசித்து வைத்துள்ளாரா என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்திருக்கிறார். "மிகவும் முக்கியமான பொறுப்புகளை வகிக்கப்போகிறவர்கள் கவர்ச்சிகரமானவர்களாகவும் வேலையை ஒழுங்காகச் செய்பவர்களாகவும் புத்தாக்கத்திறன் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே முக்கியம்," என்று பிரசல்ஸ் நகரில் நிகழ்ந்த ஐரோப்பிய ஒன்றிய விருந்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஆண்-பெண் பாலின சமநிலையைத் தாம் முக்கியமாகக் கருதுவதாகக் கூறும் திரு மக்ரோன், ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தில் இரண்டு ஆண்களையும் இரண்டு பெண்களையும் முன்மொழியப்போவதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் அடுத்த தலைவராக யார் இருக்கவேண்டும் என்பது குறித்து திரு மக்ரோனுக்கும் ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.