அமெரிக்க தடையால் பல கோடி மக்கள் பாதிப்பு: ஹுவாவெய்

ஹுவாவெய் நிறுவனத்துக்கு எதி ராக விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடையால் பில்லியன் கணக்கான பயனீட்டாளர்கள் பாதிக்கப்படுவ தாக அந்நிறுவனத்தின் உயர்மட்ட சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

சோங் லுயிபிங் எனப்படும் அவர் சீனாவின் ஷென்ஸென் நக ரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “வர்த்தகத் தடை அமெரிக்க நிறுவனங்களை நேரடி யாகப் பாதிப்பதோடு ஏராளமான வேலைகளுக்கு வேட்டு வைக்கும்,” என்றார்.

ஹுவாவெய் நிறுவனம் மீது வா‌ஷிங்டன் அண்மையில் தடை விதித்தது. 

உரிமம் இருந்தாலன்றி அமெ ரிக்க நிறுவனங்கள் ஹுவா வெய்யுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என அந்தத் தடையில் தெரிவிக்கப் பட்டு இருந்தது. 

அமெரிக்காவுக்கும் ஹுவா வெய் நிறுவனத்துக்கும் இடை யிலான பூசலை இந்தத் தடை அதிகரித்து உள்ளது. தேசிய பாது காப்பு மீதான கவலைகளை தடைக்குக் காரணமாக அமெ ரிக்கா சொல்லி இருந்தது.

தனது தொலைத்தொடர்பு சாத னங்களின் பயன்பாட்டால் பாது காப்புக்குக் குந்தகம் ஏற்படவில்லை என்றும் சீன அரசாங்கத்துக்குத் தொடர்பில்லாத நிறுவனம் தங் களுடையது என்றும் ஹுவாவெய் திரும்பத் திரும்பக் கூறிய நிலை யில் தடை விதிக்கப்பட்டது.

“பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஹுவாவெய்  இருப்பதற்கான ஆதாரம் எதையும் அமெரிக்க அர சாங்கம் வெளியிடவில்லை. எல் லாம் ஊகம்தான்,” என்று சோங் கூறினார்.

எனவே தனது பொருட்களை வாங்கக்கூடாது என்று அமெ ரிக்கா விதித்திருக்கும் தடைக்கு எதிராக ஹுவாவெய் வழக்குத் தொடுத்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வா‌ஷிங்டன் தனது சட்ட விரோத நடவடிக்கையை நிறுத்த வேண்டும்  என்பதற்காக இந்த வழக்கு போடப்பட்டு உள்ளதாகச் சொன்ன சோங், ஹுவாவெய்யின் வர்த்தகத்தை முடக்கும் செயலில் அமெரிக்கா இறங்கி இருப்பதாகக் கூறினார். 

டெக்சஸ் மாநிலத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஹுவாவெய் வழக்கு தொடர்பான மனுவை சமர்ப் பித்தது.

அமெரிக்காவுக்கு எதிரான வழக்கு பற்றி ஹுவாவெய் உயர் மட்ட சட்ட அதிகாரி சோங் லுயிபிங் செய்தியாளர்களிடம் விளக்கினார். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon