அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் சீன ஊடகம்

அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் சீன ஊடகம்

1 mins read

ஹாங்காங் (பெய்ஜிங்) அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் ஓய்ந்தபாடில்லை. இரு நாடுகளும் தங்கள் நிலையை விட்டுக் கொடுக்காததால் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்குப் பதிலடி தரும் விதமாக அந்நாட்டுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்அரிய இயற்கைக் கனிமங்களை நிறுத்த வேண்டும் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வலியுறுத்தியுள்ளது.