கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் தனது வங்கிக் கணக்குக்கு மில்லியன் கணக்கான பணம் மாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியோடு நிலைகுலைந்து போனார; என்று நேற்று உயர; நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டில் நஜிப்பின் வங்கிக் கணக்குகள் ஏராளமான பணம் மாற்றப்பட்டது. 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையில் ஐபிஎஸ்பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷம்சுல் சுலைமான் சாட்சியம் அளித்தார;.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தம்மை விடுவித்த பிறகு நஜிப்பிடம் அவரது வங்கிக் கணக்குக்கு மில்லியன் கணக்கான பணம் மாற்றப்பட்டது குறித்து தாம் தெரிவித்ததாகவும்அப்போது அவர் அதிர்ச்சியடைந்ததாக டாக்டர; ஷம்சுல் கூறினார;.
ஊழல் தடுப்பு ஆணையம் தன்னை ஐந்து நாட்கள் தடுத்து வைத்திருந்தததாகக் கூறிய அவர், 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து எஸ்ஆர;சி இண்டர;நேஷனல், ஐபிஎஸ்பி உட்பட பல்வேறு துணை நிறுவனங்களுக்கு பணம் மாற்றப்பட்டது குறித்து தமது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் சொன்னார;.
ஐபிஎஸ்பி நிறுவனம் வழியாக மெயில் குளோபல் ரிசோர;சஸ் என்ற நிறுவனத்திற்கு அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் வங்கிக் கணக்குக்கும் ஏராளமான பணம் மாற்றப்பட்டது. ஆனால் அடையாளம் தெரியாத அந்த நபர; நஜிப் என்பது பின்னர்தான் தனக்குத் தெரியவந்தது என்றார் அவர;.

