இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தாக்குதல்களை வழிநடத்திய ஸஹாரான் ஹஷிமை முன்கூட்டியே கைது செய்ய அதிகாரிகள் தவறியிருப்பதாக அந்நாட்டின் தலைமை புலனாய்வு அதிகாரி தெரிவித்திருக்கிறார். "வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளுக்காக அவர் மீது புகார் செய்யப்பட்டிருந்தது. தாக்குதலுக்கு முன்னதாகவே அவர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்," என்று தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் திரு மெண்டில் தெரிவித்தார். மிதவாதப் போக்கைக் கொண்ட முஸ்லிம் அமைப்பு ஒன்றுக்கும் ஹஷிமுக்கும் இடையே ஈராண்டுக்கு முன்னர் தகராறு மூண்டதாகத் தகவல் வெளிவந்தது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. தாக்குதலுக்கு முன்னதாகவே இந்தியாவிலிருந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டபோதும் அதற்கு ஏற்றாற்போல் அதிகாரிகள் செயல்படத் தவறியதாகக் கடந்த மாதம் தகவல் வெளிவந்தது. இதன் தொடர்பில் அந்நாட்டின் போலிஸ் தலைவர் பூஜித் ஜெயசுந்தர பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
எச்சரிக்கைகளைப் புறக்கணித்து தாக்குதல்காரனைக் கைது செய்யத் தவறிய இலங்கை
1 mins read
-

