பாகிஸ்தானில் ஹெச்ஜவி நோயாளியான தனது மனைவியை ஆடவர் ஒருவர் கொலை செய்திருக்கிறார். அந்தப் பெண் வேறொருவருடன் கள்ள உறவு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அந்தக் கொலையைச் செய்ததாக அந்த ஆடவர், தன்னைக் கைது செய்த போலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார். பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்திலுள்ள லர்கனா புறநகர்ப்பகுதியில் இந்தக் கொலை நடந்ததாக போலிசார் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களில் கிட்டத்தட்ட 700 பேருக்கு ஹெச்ஐவி பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் அந்த வட்டாரத்தில் பொதுமக்களின் கல்வி அறிவும் நடப்பு விவகார அறிவும் குறைவாக இருப்பதால் இது குறித்து அவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. போலி மருத்துவர்களாலும் மிக அசுத்தமான மருத்துவக் காரணங்களாலும் இந்நோய் விரைவில் பலருக்குப் பரவியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
'ஹெச்ஐவி' பெண் நோயாளியைக் கொன்ற கணவன்
1 mins read
-

